அதிமுகவின் திட்டமிட்ட நாடகம்: பொங்கும் பொன்னார்

அதிமுகவின் திட்டமிட்ட நாடகம்: பொங்கும் பொன்னார்
அதிமுகவின் திட்டமிட்ட நாடகம்: பொங்கும் பொன்னார்

தமிழகத்தில் திட்டமிடப்பட்ட நாடகம் அரங்கேற்றப்படுவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

அதிமுகவின் இரு அணிகளும் இணைய ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நாகர்கோயிலில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ’தமிழகத்தில் திட்டமிட்ட நாடகம் அரங்கேற்றப்படுகிறது.

அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றானால் உண்மைகள் மறைக்கப்படலாம். ஆகையால், ஜெயலலிதா மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். இரட்டை இலை சின்னத்துக்காக தரகருக்கு பணம் கொடுத்ததாக, தினகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்துக்கே அவர் அவமானத்தை தேடித் தந்துள்ளார். தேர்தலுக்கு பணம் கொடுக்கும் கட்சிகள், அதன் தலைவர்கள், சம்பந்தப்பட்ட நபர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com