தாய்லாந்தில் பிரதமர் பதவி வேட்பாளர் பட்டியலில் இருந்து இளவரசி உபோல் ரதானாவின் பெயர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தாய்லாந்தில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. ஜனநாயக ஆட்சியை கொண்டு வர வலியுறுத்தி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டதை அடுத்து பொதுத்தேர்தலை நடத்தும்படி கடந்த மாதம் மன்னர் மகா வஜிரலோங்கோர்ன் (Maha Vajiralongkorn) தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் 24 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில், திடீரென்று, தாய் ரக்ஷா சார்ட் (Thai Raksa Chart ) கட்சி சார்பில் பிரதமர் பதவிக்கு தாய்லாந்து இளவரசி உபோல் ரதானா (Ubolratana) போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பிரதமர் பதவிக்கு அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி போட்டியிட, மன்னரும் அவரது சகோதரருமான மகா வஜிரலோங்கோர்ன் எதிர்ப்பு தெரிவித்தார். இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானதும் பொருத்தமற்றதும் ஆகும் என கூறியிருந்தார்.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பிரதமர் வேட்பாளர் பட்டியலில் இளவரசி உபோல் ரதானா பெயர் இடம்பெறவில்லை. அவரது பெயர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிர்ச்சி வெளியிட்டுள்ளார் உபோல் ரதானா
Loading More post
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!