Published : 18,Apr 2017 05:54 AM
அதிமுகவை காப்பாற்ற இணைகிறோம்: உதயகுமார்

அதிமுகவின் இரண்டு அணிகளும் ஒன்றாக இணைவதற்கு பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
ஐஎன்எஸ் சென்னை போர்கப்பலில் கப்பலில் பயணம் செய்துகொண்டிருக்கும் அமைச்சர் உதயகுமார் இதுகுறித்து கூறுகையில், ’கட்சி, ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும். முடக்கப்பட்ட சின்னத்தை மீட்க வேண்டும்.
இது ஒன்றரை கோடி தொண்டர்களின் எண்ணம். ஆகையால், இரு அணிகளும் இணைய வேண்டும். அதற்காக வெளிப்படையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடைபெறும். பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்’ என்று அவர் தெரிவித்தார்.