[X] Close

எம்எல்ஏ சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: 2 பேர் கைது

MLA-Shot-Dead--Two-Arrested

மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ சத்யஜித் விஸ்வாஸ் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Advertisement

மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. முதலமைச்சராக மம்தா பானர்ஜி உள்ளார். இந்நிலையில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கிரிஷன்காஞ்ச் தொகுதி எம்எல்ஏவான சத்தியஜித் பிஸ்வாஸ், நேற்று அப்பகுதியில் நடைபெற்ற சரஸ்வதி பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றார்.


Advertisement

(சுட்டுக்கொல்லப்பட்ட எம்எல்ஏ)

நிகழ்ச்சி மேடையில் இருந்து சத்தியஜித் பிஸ்வாஸ் கீழிறங்கிய நேரத்தில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சத்தியஜித்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் துப்பாக்கி குண்டு அவரின் உடலில் பாய்ந்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே பாஜக, மற்றும் அக்கட்சியின் தொண்டர்கள் தான் இந்த கொலைக்கு காரணம் என திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் கௌரி ஷங்கர் தத்தா குற்றம்சாட்னார். ஆனால்இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பாஜக இவ்விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை என வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், சத்யஜித் விஸ்வாசை‌ சுட்டுக்கொன்ற விவகாரத்தில் தொடர்புடையதாக கூறப்படும் இரண்டு பேரை காவல்துறையினர்‌ கைது செய்தனர். அதுமட்டுமின்றி வேறு சிலரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவ்விவகாரம் தொடர்பாக ஹன்ஸ்காலி காவல் நிலைய பொறுப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close