சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள என்.ஜி.கே. படத்தின் டீசர் வரும் 14ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் என்.ஜி.கே. இந்தப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். மேலும், சாய் பல்லவி, பாலா சிங், மன்சூர் அலி கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த தீபாவளிகே இந்தப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது. அந்த இடைவெளியில் நடிகர் சூர்யா, கே.வி. ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்துக்காக பணியாற்றினார்.
பின்னர் கடந்த வருட கடைசி மாதங்களில் என்.ஜி.கே. படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற்றது. இந்நிலையில் கிட்டத்தட்ட படப்பிடிப்புகள் முடிந்துவிட்டதாக கூறப்படும் நிலையில் படத்தின் டீசர் வரும் 14ம் தேதி காதலர் தினத்தன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் எனப் படத்தயாரிப்பு நிறுவனமான ட்ரீம்வாரியர்ஸ் அறிவித்துள்ளது.
நீண்ட நாட்களாக என்.ஜி.கே குறித்த அப்டேட்டுக்காக காத்திருந்த சூர்யா மற்றும் செல்வராகவன் ரசிகர்கள் டீசர் குறித்த அறிவிப்பை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். #NGKTeaserCelebration என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
என்.ஜி.கே திரைப்படம் வரும் ஏப்ரலில் திரைக்கு வரலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
Loading More post
``பேரறிவாளனை முதல்வர் கட்டியணைப்பது நல்லதல்ல”- பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
இந்திய அணியில் இடமில்லை - அதிருப்தியில் நிதிஷ் ராணா
`கிரண்தான் குற்றவாளி’- விஸ்மயா வழக்கில் கேரள நீதிமன்றம் உத்தரவு; நாளை தண்டனை விவரங்கள்
'எச்சில் பட்டத கொடுங்க!' - முஸ்லிம் எம்எல்ஏவும் பட்டியலின சாமியாரும் இனிப்பு உண்ட தருணம்
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை