[X] Close

‘சந்தோஷ் சிவன்’ இயக்கத்தில் ‘அதிதி பாலன்’?

-Aruvi--fame-Aditi-Balan-to-star-in-Santosh-Sivan---s--Jack-n-Jill-

சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் மலையாளப்படம் ஒன்றில் அருவி படத்தில் நடித்த அதிதி பாலன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன


Advertisement

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் கடந்த 2015 ஆண்டு வெளியான திரைப்படம் ‘என்னை அறிந்தால்’. இத்திரைப்படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார் அதிதி பாலன். இதைத்தொடர்ந்து இயக்குநர் அருண் பிரபு புருசோத்தமன் இயக்கத்தில் கடந்த 2017 ஆண்டு வெளியான திரைப்படம் அருவி. 


Advertisement

இப்படத்தில் நடித்த அதிதி பாலன் தன் நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். இத்திரைப்படத்திற்காக, சிறந்த நடிகைக்கான சில விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். இப்படத்தைத் தொடர்ந்து வேறு எந்தப் படத்திலும் அதிதி பாலன் நடிக்கவில்லை. இந்நிலையில், சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் மலையாளப்படம் ஒன்றில் அவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சந்தோஷ் சிவன் இயக்கத்தில் மளையாளத்தில் உருவாகி வரும் 'ஜாக் அண்ட் ஜில்' திரைப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பிரபல நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் பிரபல நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாப்பாத்திரத்தில் இடம்பெற்றுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close