ஏழை எளிய மக்களுக்கு பயனளிக்காத, உதவாக்கரை பட்ஜெட்டாக தமிழக பட்ஜெட் அமைந்துள்ளதாக தமிழக எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2019- 20 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் 8 வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார். டாஸ்மாக் கடைகளை மூடியது, மெட்ரோ ரயில் தொடக்கம், தமிழ் மொழி வளர்ச்சி, நீர்வள ஆதாரம் மற்றும் பாசனத்துறை உள்ளிட்ட பல துறைகளின் கீழ் திட்டங்களை அறிவித்தார். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பட்ஜெட்டை வாசித்தார்.
இந்நிலையில் ஏழை எளிய மக்களுக்கு பயனளிக்காத, உதவாக்கரை பட்ஜெட்டாக தமிழக பட்ஜெட் அமைந்துள்ளதாக மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். பட்ஜெட்டுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு கோடி இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் போது, அது குறித்த எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. வருவாய், வேலைவாய்ப்பை பெருக்குவதற்கான எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.
சங்கீத வித்வான் போல சொன்னதையே நிதியமைச்சர் திரும்ப திரும்ப கூறிக்கொண்டு இருந்தார். அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. நெல் கொள்முதலுக்கான விலை, கரும்புக்கான ஆதார விலையை அரசு உயர்த்தவில்லை என்று தெரிவித்தார்.
Loading More post
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
கருணாநிதி பிறந்த நாளில் 'விக்ரம்' ரிலீஸ் ஏன்? - கமல்ஹாசன் பதில்
இதயங்களை வென்ற ரஜத் படிதார் - லக்னோவை வீழ்த்தி அசத்திய பெங்களூரு
ஜி ஸ்கொயர் தொடர்ந்த வழக்கு: எப்ஐஆரில் இருந்து சிலரது பெயரை நீக்க நடவடிக்கை
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!