சபரிமலை செல்லமுயன்ற ரெஹானா பாத்திமா செக் மோசடி குற்றவாளி !

சபரிமலை செல்லமுயன்ற ரெஹானா பாத்திமா செக் மோசடி குற்றவாளி !
சபரிமலை செல்லமுயன்ற ரெஹானா பாத்திமா செக் மோசடி குற்றவாளி !

முதலில் சபரிமலை செல்ல முயன்ற பெண் ரெஹானா பாத்திமா செக் மோசடி செய்து அதற்காக ஒருநாள் சிறையும், அபராதம் பெற்றுள்ளார்.

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னர், முதலில் சென்ற பெண் ரெஹானா பாத்திமா. ஒரு பெண் பத்திரிகையாளர் மற்றும் பாத்திமா இருவரும் சபரிமலை சென்றபோது அங்கு ஐயப்ப பக்தர்களால் தடுத்து அனுப்பப்பட்டனர். இவர் தொடர்பான செக் மோசடி தகவல்கள் தற்போது வெளியாக, அதனை பலர் சமூக வலைத்தளங்களில் பரப்பி கேள்விகளை எழுப்பி வருகின்றனர். 

கடந்த 2014ஆம் ஆண்டு அனில் குமார் என்பவர் பாத்திமாவிற்கு ரூ.2 லட்சம் கடனாக வழங்கியுள்ளார். அதை திருப்பி தரும்போது செக்-காக (காசோலை) பாத்திமா வழங்கியுள்ளார். அனில் குமார் அதை வங்கியில் செலுத்த, அது அவருக்கே திரும்ப வந்துள்ளது. இதையடுத்து செக் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அனில் குமார், பாத்திமா மீது புகார் அளித்துள்ளார். இதையடுத்து பாத்திமா மீது வழக்குப்பதியப்பட்டு, ஆலப்புழா குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அங்கு பாத்திமா குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட, அவர் கேரள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். ஆனால் உயர்நீதிமன்றம் பாத்திமாவை குற்றவாளி என தெரிவித்துவிட்டது. இதனால் கடந்த திங்கட்கிழமை ஒருநாள் சிறை தண்டனைக்காகவும், ரூ.2.1 லட்சம் அபராதம் செலுத்தவும் ஆலப்புழா நீதிமன்றத்தில் பாத்திமா ஆஜரானர். இந்த தகவல்களை பரப்பி தான் தற்போது கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அத்துடன் அவர் சபரிமலை சென்று விளம்பரத்திற்காகவும், சர்ச்சையை ஏற்படுத்தவும் தான் என குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

இந்த சர்ச்சை மட்டுமின்றி பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் பாத்திமா, மேலும் பல சர்ச்சைகள் ஏற்கெனவே சிக்கியவர். கடந்த 2018, மார்ச் மாதம் பேராசிரியர் ஒருவர் பெண்கள் தொடர்பாக தவறாக பேசியதை கண்டிக்கும் வகையில், மேலாடையின்றி தர்பூசணிப் பழங்களைக்கொண்டு உடலை மறைத்து புகைப்படங்கள் வெளியிட்டார். அது அப்போது வைரல் புகைப்படம் ஆனது. அதற்கு முன்னர் பாரம்பரிய முறைக்கு எதிராக, கடந்த 2014ஆம் ஆண்டு “கிஸ் ஆஃப் ல்வ்” (Kiss of Love) என்ற முகாமை கொச்சின் நடத்தில் சர்ச்சையில் சிக்கினார்.
 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com