Published : 08,Feb 2019 02:33 AM

சையத் முஷ்டாக் அலி கோப்பை: தமிழக அணியில் முரளி விஜய், அபினவ் அதிரடி நீக்கம்!

Syed-Mushtaq-Ali-T20---Murali-Vijay-dropped-from-Tamilnadu-team

சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் தொடருக்கான தமிழக அணியில் முரளி விஜய் நீக்கப்பட்டுள்ளார்.

ரஞ்சி டிராபியில் விளையாடும் அணிகளுக்கு இடையே, சையத் முஷ்டாக் அலி கோப்பை டி-20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த வருடத்துக்கான தொடர் வரும் 21 ஆம் தேதி முதல் மார்ச் 2 ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் தமிழக அணிக்கு ஆர்.அஸ்வின் கேப்டன். இளம் வீரர் வாஷிங்டன் சுந்தர் துணை கேப்டனாக செயல்படுகிறார். மூத்த வீரர்கள் முரளி விஜய், அபினவ் முகுந்த் ஆகியோர் இடம்பெற வில்லை. சுழற்பந்துவீச்சாளர் சிவி வருண் காயம் காரணமாக விளையாடவில்லை.

இதுபற்றி அணி தேர்வாளர் ஒருவர் கூறும்போது, ‘’முரளி விஜய், அபினவ், அபராஜித் ஆகியோர் ஏற்கனவே தங்களை நிரூபித்துவிட்டார்கள். இளம் வீரர்கள் எப்படி தங்கள் திறமையை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டி இருப்பதால் இவர்களை அணியில் சேர்க்க வில்லை. தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் சிறப்பாக விளையாடிய ஆர்.விவேக், ஹரி, சதுர்வேத் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.  வாஷிங்டன் சுந்தர், டி20 போட்டியில் முக்கியமான வீரர். அவருக்குப் பொறுப்பளிக்க வேண்டும் என்றும் துணை கேப்டனாக்கி இருக்கிறோம். விஜய் சங்கரும் அணியில் இருக்கிறார்.

ஆனால், அவர், இப்போது தேசிய அணியில் இடம்பெற்றிருக்கிறார். இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவர் விளையாட இருப் பதால், அது முடிந்த பின் அணியில் இணைவார்’’ என்று தெரிவித்தார்.

அணி விவரம்:
ஆர்.அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), சி ஹரி நிஷாந்த், ஷாரூக்கான், இந்திரஜித், விவேக், டி.நடராஜன், முகமது, கவுசிக், சாய் கிஷோர், முருகன் அஸ்வின், சதுர்வேத், விஜய் சங்கர், அதிசயராஜ் டேவிட்சன், அபிஷேக் தன்வார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்