இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் , இங்கிலாந்திற்கு எதிரான இருபது ஓவர் போட்டி தொடருடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
“மிதாலி ராஜ்” அண்மையில் கிரிக்கெட் உலகில் அதிகமாக உச்சரிக்கப்பட்ட பெயர் இதுவாகத்தான் இருக்கும். ஆம் கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்திடம் தோற்று வெளியேறியது. இந்த முக்கியமான போட்டியில் சாதனை வீரர் மிதாலி ராஜ் ஆடும் லெவனில் சேர்க்கப்படாமல் ஓரங்கட்டப்பட்டார். இத்தனைக்கும் அந்தத் தொடரில் மிதாலி ராஜ் சிறப்பாகவே விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், பல தடைகளையும், அவமானங்களையும், சர்ச்சைகளையும் கடந்து தற்போது கிரிக்கெட்டில் ஜொலித்து கொண்டு இருக்கிறார். சர்வதேச போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீராங்கனை என்ற சாதனைக்கு செந்தகாரரான மிதாலி ராஜ், இங்கிலாந்திற்கு எதிரான இருபது ஓவர் போட்டி தொடருடன் 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டி20 போட்டியில், அதிக ரன் குவித்த இந்தியர்கள் பட்டியலில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை மிதாலி ராஜ் முதலிடம் பிடித்து சாதனையும் படைத்துள்ளார். இந்நிலையில் இருபது ஓவர் போட்டிக்கு விடை கொடுக்க காத்திருக்கிறார் என்ற தகவல்கள் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 4 ஆம் தேதி இங்கிலாந்திற்கு எதிரான இருபது ஓவர் போட்டி தொடர் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்