
ஹோட்டலுக்கு சென்று உணவு சாப்பிடும் காலம் மாறி வீட்டிற்கே சாப்பாட்டை வரவைத்து உண்ணும் நிலை இன்று நடைமுறையில் உள்ளது. சாப்பாட்டை ஆர்டர் செய்தால் டெலிவரி செய்வது ஒரு நபராகவே இதுநாள் வரை இருந்தது. ஆனால் தற்போது அந்த வேலையையும் ரோபோக்கள் செய்கின்றன.
உணவு விற்பனை செயலியான எல்ப் ஈட் 24 நிறுவனமும் மார்பிள் ரோபோ நிறுவனமும் இணைந்து தானியங்கி ரோபோக்களை வடிவமைத்துள்ளனர். சாப்பாடு ஆர்டர் செய்தால் இந்த ரோபோக்கள் வீட்டுக் கதவைத் தட்டி சேர்த்துவிடுமாம்.
சான் பிரான்ஸிஸ்கோவின் சில பகுதி உணவுவிடுதிகள் உணவை சப்ளை செய்ய இந்த ரோபோக்களை பயன்படுத்துகின்றனர். இவை, சென்சார் கேமரா மற்றும் அல்ட்ராசோனிக் தொழில்நுட்ப உதவியுடன் சாலைகளில் பயணிக்கும். வழியில் எதிர்படும் மனிதர்கள், கார்கள் உள்ளிட்ட அனைத்தையும் இவற்றால் உணர முடியுமாம். இந்த தானியங்கி ரோபோக்களின் செயற்பாடுகளை தொடர்ந்து ஹோட்டலின் உரிமையாளர்கள் கண்காணித்து கொண்டே இருப்பார்களாம். இதனால் உணவை எடுத்து செல்ல எந்தச் சிக்கலும் இருக்காது என ரோபோ வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.