[X] Close

சிபிஐ முன்பு கொல்கத்தா காவல் ஆணையர் ஆஜராக உத்தரவு: உச்சநீதிமன்றம் அதிரடி

The-Police-Commissioner-will-appear-before-the-CBI-says-SC-on--west-bengal-issue

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர், சிபிஐ முன்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க, அவரது வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சென்றனர். அவர்களை கொல்கத்தா போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் சிபிஐ அதிகாரிகளை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்னர் விடுவிக்கப்பட்டனர். இதனையடுத்து சாரதா சிட்பண்ட் முறைகேடு வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையரை விசாரிக்க அனுமதிகோரி உச்சநீதிமன்றத்தில் சிபிஐ நேற்று  மனு தாக்கல் செய்தது. மேலும் தங்கள் மனுவை அவசர வழக்காக விசாரித்து உத்தரவு பிறப்பிக்குமாறு தலைமை நீதிபதி அமர்விடம் சிபிஐ தரப்பு முறையிட்டிருந்தது. 


Advertisement

மனுத்தாக்கல் கவனத்தில் எடுத்த உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. அதன்படி இன்று காலை சிபிஐ தொடர்ந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. பின்னர் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் மேகாலயா மாநிலத்தின் ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் கொல்கத்தா காவல் ஆணையர் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டது. மேலும் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகாதது தொடர்பாக கொல்கத்தா காவல் ஆணையருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கொல்கத்தா காவல் ஆணையர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டோம் என்று ஒருபோதும் நாங்கள் கூறவில்லை என்றும் அரசியல் ரீதியாக சிபிஐ பயன்படுத்தப்படுவதையே எதிர்க்கிறோம் என்று தெரிவித்தார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close