சின்னத்தம்பியை கும்கியாக மாற்றும் எண்ணம் தற்போது இல்லை என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டத்திலுள்ள பெரியதடாகம் வனப்பகுதியில் விவசாய நிலங்களை சின்னதம்பி என்ற காட்டுயானை சேதப்படுத்துவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து பெரிய போராட்டத்துக்கு பிறகு சின்னதம்பியை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.
இதனையடுத்து வாகனம் மூலம் ஆனைமலை புலிகள் காப்பகத்திலுள்ள டாப்சிலிப் வனப்பகுதிக்கு சின்னத்தம்பி யானை கொண்டு செல்லப்பட்டது. சின்னதம்பி யானையின் இருப்பிடத்தை அறிய அதன் உடலில் ஜிபிஎஸ் கருவி பொருத்தியிருந்தனர். ஆனால் டாப்சிலிப் பகுதியில் விடப்பட்ட யானை சின்னதம்பி இரண்டு நாட்களுக்குள் மீண்டும் ஊருக்குள் வந்தது. இதற்கிடையே ஊருக்குள் சுற்றித்திரியும் சின்னதம்பியை கும்கியாக மாற்றப்படும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் சின்னதம்பி யானையை கும்கியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் விலங்கு நல ஆர்வலர் அருண் பிரசன்னா முறையீடு செய்துள்ளார். அந்த முறையீட்டில் முறையீட்டை யானைகளை வேறு இடத்துக்கு கொண்டு செல்வது தொடர்பாக விதிகளை வகுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கு இன்று மதியமே விசாரணைக்கு வந்தது. அப்போது, சின்னதம்பியை கும்கியாக மாற்றும் எண்ணம் தற்போது அரசுக்கோ, வனத்துறைக்கோ இல்லை எனவும் சின்னதம்பியை மீண்டும் காட்டுக்குள் அனுப்பவே இரண்டு கும்கி யானைகள் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறோம் எனவும் தெரிவிக்கப்பட்டது. அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் மற்றும் தலைமை வனப்பாதுகாவலர் ஸ்ரீவத்சவா ஆகியோர் தனித்தனியே தகவல் தெரிவித்தனர்.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'