Published : 04,Feb 2019 07:11 AM

மனைவியை கத்தியால் குத்திவிட்டு கணவன் தற்கொலை முயற்சி

Husband-attempts-suicide-after-trying-to-kill-wife

சென்னை அரும்பாக்கத்தில் மனைவியை கத்தியால் குத்திவிட்டு கணவன் தற்கொலை முயற்சி.

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த எய்ட்ஸ் நோயாளியான ஒருவரை 2 ஆண்டுகளாக வீட்டிற்குள் சேர்க்காமல் அவரது மனைவி இருந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த கணவன், இன்று காலை வீட்டிற்கு வந்துள்ளார். மனைவி தனது ஆதார் கார்டை தரும்படி கேட்டுள்ளார். ஆதார் கார்டு எடுக்கச்சென்ற மனைவியின் கண்ணில் மிளகாய் பொடி தூவி கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். 

Image result for crime

இதனால் கணவனும் தன் கழுத்தை கத்தியால் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். 
தற்போது ஆபத்தான நிலையில் இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து அரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்