ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி வெற்றி பெற 516 ரன் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற் றுள்ளது. பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கான்பெராவில் நடந்து வருகிறது.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்சில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 384 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியில் டிராவிஸ் ஹெட் 161 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்கு இது முதல் சதம். தொடக்க ஆட்டக்காரர் ஜோ பர்ன்ஸ் 172 ரன்களுடனும் குர்டிஸ் பேட்டர்சன் 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். பர்ன்ஸ்- டிராவிஸ் ஹெட் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 308 ரன்கள் சேர்த்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த பர்ன்ஸ் 180 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரஞ்சிதா பந்துவீச்சில் போல்டானார். பின்னர் கேப்டன் பெய்ன் வந்தார். இருவரும் இணைந்து நிதானமாக ஆடினார். அணியின் ஸ்கோர் 5 விக்கெட்டுக்கு 534 ரன்கள் ஆக இருந்தது.போது, டிக்ளேர் செய்யப்பட்டது. சிறப்பாக ஆடிய குர்திஸ் பேட்டர்சன் தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். அவர் 114 ரன்களும், ஆஸ்திரேலிய கேப்டன் பெய்ன் 45 ரன் எடுத்து ஆட்ட மிழக்காமல் இருந்தனர்.
முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய வீரர்கள் 3 பேர் சதம் அடித்துள்ளனர். இலங்கை அணி தரப்பில், விஷ்வா பெர்னாண்டோ 3 விக்கெட்டும், கருணாரத்னே, ரஞ்சிதா தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி, 215 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. காயம் காரணமாக விலகி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கருணாரத்னே மீண்டும் வந்து களமிறங்கினார். அவர் மட்டுமே அதிகபட்சமாக 59 ரன் எடுத்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான திரிமன்னே 41 ரன் எடுத்தார். மற்றவர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, 3 விக்கெட் டுக்கு 196 எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் உஸ்மான் கவாஜா சதம் அடித்தார். டிராவிஸ் ஹெட் 59 ரன்கள் எடுத்தார்.
பின்னர் வெற்றிக்கு 516 ரன் தேவை என்ற நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை இலங்கை அணி தொடர்ந்தது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 17 ரன் எடுத்துள்ளது. இன்னும் இரண்டு நாட்கள் இருந்தாலும் ஆஸ்திரேலிய அணிக்கே வெற்றி வாய்ப்பு இருக்கிறது.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'