[X] Close

ஜம்மு- காஷ்மீர் பாரம்பரிய உடையில் அசத்திய பிரதமர் மோடி 

PM-Narendra-Modi-speech-in-Jammu-And-Kashmir

லே பகுதியில் ரயில் பாதை பணிகள் முடிவடைந்தால் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என பிரதமர் நரேத்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜம்மு- காஷ்மீர் பாரம்பரிய உடை அணிந்து சென்ற‌ பிரதமர் நரேந்திர மோடிக்கு அங்குள்ள மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். லே பகுதியில் 83 ஆயிரத்து 360 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். 


Advertisement

அப்போது பேசிய பிரதமர் பிலாஸ்பூர் - மணாலி - லே ரயில் திட்டப் பணிகள் முடிவடைந்தால் டெல்லியிலிருந்து லே செல்லும் பயண தூரம் குறைவாகும் என்றும் இதன் மூலம் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில்‌ சுற்றுலா மேம்படும் என்றும் தெரிவித்தார். லடாக் பகுதியிலிருந்து ஐந்து புதிய மலை ஏறும் பாதை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன் மூலம் கோடை காலத்தில் மூன்று லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் எனவும் பிரதமர் மோடி நம்பிக‌கை தெரிவித்தார். லடாக் தன்னாட்சி கவுன்சிலின் முன்னேற்றத்துக்காக கூடுதல் அதிகாரமும், நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close