[X] Close

ஒரு ட்வீட் மூலம் ராணுவ வீரருக்கு உதவிய கெளதம் காம்பீர்! குவியும் பாராட்டு!

Gautam-Gambhir-Shares-Photo-of-Army-Veteran-Begging-in-Delhi

டெல்லியில் பதாகை ஏந்தி உதவி கேட்ட இந்திய ராணுவத்தின் முன்னாள் வீரருக்கு கிரிக்கெட் வீரர் கெளதம் காம்பீர் ட்விட்டர் மூலம் உதவி உள்ளார்.


Advertisement

டெல்லியில் கன்னாட் பகுதியில், கையில் ஒரு பதாகையுடன் பீதாம்பரன் என்ற இந்திய ராணுவ முன்னாள் வீரர் உதவி கேட்டு வந்துள்ளார். அந்த பதாகையில் '' முன்னாள் ராணுவ வீரர். 1965-71 காலகட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் போரில் பங்கேற்றுள்ளேன். அண்மையில் விபத்து ஏற்பட்டது. மருத்துவ செலவுக்கு பணம் இல்லை. உங்கள் உதவி தேவை'' என எழுதப்பட்டிருந்தது. 


Advertisement

இதனிடையே பீதாம்பரன் பதாகையுடன் நிற்கும் புகைப்படத்தை கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். மேலும் பீதாம்பரன் இந்திய ராணுவத்தில் பணியாற்றியதற்கான அடையாள அட்டையை வைத்துள்ளதாகவும் ட்விட்டரில் குறிப்பிட்டார். சில தொழில்நுட்ப காரணங்களால் இவருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வில்லை என ட்விட்டரில் பகிர்ந்தார். 

இதுதொடர்பாக பீதாம்பரனுக்கு உடனடியாக தேவையான உதவி வழங்கப்படும் என இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் பதிலுரை பதிவிட்டார். அதற்கு நன்றி தெரிவித்துள்ள கவுதம் காம்பீர், பீதாம்பரனுக்கு இந்திய ராணுவம் செய்து வரும் உதவி குறித்து விளக்கம் தந்தமைக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார். இந்த நற்செயல் தொடர்பாக கவுதம் காம்பீரை சமூக வலைதள பயனாளர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close