[X] Close

பிரதமர் மோடி இன்று ஜம்மு-காஷ்மீர் பயணம்.. பலத்த பாதுகாப்பு

PM-Modi-visit-Jammu-Kashmir-Today

ஜம்மு-காஷ்மீரில் 44 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.


Advertisement

காஷ்மீர், ஜம்மு, லே ஆகிய பகுதிகளுக்கு பிரதமர் மோடி இன்று பயணிக்கிறார். அப்போது ஜம்முவில் 35 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதோடு பல்வேறு திட்டங்களை தொடங்கியும் வைக்கிறார். காஷ்மீரில் 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார். எய்ம்ஸ் மருத்துவமனைக்கும் அடிக்கல் நாட்டவுள்ளார். ஸ்ரீநகரில் புகழ்பெற்ற தால் ஏரியையும் பார்வையிடுகிறார்.


Advertisement

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீரில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 62 கம்பெனி படைகள் குவிக்கப்பட்டுள்ளன. இரவு முழுவதும் 8 கம்பெனி படை வீரர்கள் தீவிரமாக கண்காணித்தனர். கடும் பனிப்பொழிவு காணப்படும் நிலையில் இரவிலும் தெளிவாக கண்காணிக்கும் திறன் கொண்ட கருவிகள் மூலம் கண்காணிக்கப்பட்டன.


Advertisement

Advertisement
[X] Close