Published : 02,Feb 2019 06:36 AM

புதிய ‘பேட் மேன்’ ஆகிறார் பிரியங்கா சோப்ரா கணவர்!

Nick-Jonas-to-play-Batman-after-Ben-Affleck-s-exit-

’பேட்மேன்’ பட வரிசையின் அடுத்த படத்தில், பென் அஃப்லெக்-குக்குப் பதிலாக, இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவின் கணவரும் ஹாலிவுட் நடிகருமான நிக் ஜோனாஸ் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.

சூப்பர் ஹீரோ படங்களில் ’பேட்மேனு’க்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இதனாலேயே 13-க்கும் மேற்பட்ட ’பேட்மேன்’ வரிசை படங்கள் வெளியாகியுள்ளன. இன்னும் வெளியாக இருக்கின்றன. வசூலிலும் இந்தப் படங்கள் சாதித்து வருகின்றன. இந்நிலையில் பேட்மேன் பட வரிசையில், ’ஜஸ்டிஸ் லீக்’, ’பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன்: டான் ஆஃப் ஜஸ்டிஸ்’ ஆகிய படங்களில் ’பேட்மேன்’ ஆக, பென் அஃப்லெக் (Ben Affleck)  நடித்திருந்தார். இவர் அடுத்த ’பேட்மேன்’ படத்தில் நடிப்பதில் இருந்து விலகியுள்ளார்.

அவருக்குப் பதிலாக, நிக் ஜோனாஸ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர், பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவின் கணவர். கடந்த டிசம்பர் மாதம்தான் இவர்கள் திருமணம் நடந்தது. 

அடுத்த ’பேட்மேன்’ வரிசை படம் 2021 ஆம் ஆண்டு வெளியாக உள்ளன. இதில் யார் நடிக்க இருக்கிறார்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘’முதல் பெயர் நிக், கடைசி பெயர் ஜோனாஸ்’’ என்று சமூக வலைத்தளத்தில் பதில் அளித்துள்ளார் நிக் ஜோனாஸ்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்