பிரதமர் மோடி தலைமையில் சிபிஐக்கு புதிய இயக்குனரைத் தேர்வு செய்வதற்காக நடந்த இரண்டாவது கூட்டத்திலும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
சி.பி.ஐ. இயக்குனராக இருந்த அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் மோதல் ஏற்பட்டது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறினர். இதனால் மத்திய அரசு, இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பியது. இதையடுத்து அலோக் வர்மா, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, சி.பி.ஐ. இயக்குனராக மீண்டும் பதவி ஏற்றார்.
பின்னர் அவரை தீயணைப்பு மற்றும் ஊர்க்காவல் படை இயக்குனராக மத்திய அரசு நியமித்தது. இதனால் அவர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கிடையே கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட ராகேஷ் அஸ்தானாவையும், சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் பதவியில் இருந்து மத்திய அரசு நீக்கியது. தற்போது சிபிஐ இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனத்தை எதிர்த்தும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் புதிய சிபிஐ இயக்குனரை தேர்வு செய்யும் கூட்டம், பிரதமர் மோடி இல்லத்தில் கடந்த வாரம் வியாழன் அன்று நடந்தது. அதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஆகியோரும் பங்கேற்றனர். அந்தக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று மாலை புதிய சிபிஐ இயக்குனரை தேர்வு செய்யும் கூட்டம் பிரதமர் மோடி இல்லத்தில் நடைப்பெற்றது. நீண்ட நேரம் நடந்த இந்தக் கூட்டத்திலும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால் அடுத்த முறையும் பிரதமர் தலைமையில் கூட்டம் நடக்க இருக்கிறது.
இதற்கிடையே சிபிஐ என்ற முக்கியமான அரசு அமைப்பை தற்காலிக இயக்குநரை கொண்டு நீண்டகாலத்திற்கு நிர்வகிப்பது சரியான செயல் அல்ல எனவே சிபிஐக்கு உடனடியாக நிரந்தர இயக்குநரை நியமிக்குமாறு மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
Loading More post
`பண்டிகையை கொண்டாடுங்கடே....’ - உலக பிரியாணி தினத்தை கொண்டாடுவோம் வாங்க!
புகாரை ஏற்க மறுத்த போலீஸ்: சிசுவின் சடலத்துடன் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்ட தந்தை
கும்பகோணம்: தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் ஆற்றில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை
பரிதாபம் எப்படி வேலை செய்யுது பாத்தியா பையா.. இளைஞனின் சுவாரஸ்யமான ஏர்போர்ட் ட்ரிக்!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
`பண்டிகையை கொண்டாடுங்கடே....’ - உலக பிரியாணி தினத்தை கொண்டாடுவோம் வாங்க!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!