[X] Close

“உலகின் சிறந்த அணியுடன் மோதிய அனுபவம் பெற்றோம்” - நியூஸி. கேப்டன்

An-opportunity-to-play-against-best-team-in-the-world---Kane-Williamson

உலகின் சிறந்த அணியுடன் மோதிய அனுபவம் பெற்றதாக நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.


Advertisement

இந்தியாவிற்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அபார வெற்றி பெற்றது. இதுதொடர்பாக பேசிய வில்லியம்சன், “இப்படி ஒரு வெற்றியை பெறுவோம் என எதிர்பார்க்கவில்லை. 92 ரன்களில் இந்தியாவை சுருட்டியது மகிழ்ச்சி. சில நாட்கள் இதுபோல் நல்லபடியாக செல்லும். நாங்கள் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை எடுத்துவிட்டோம். எங்கள் பந்துவீச்சாளர்களுக்கு ஏற்றவாறு பந்து சுழன்றபடி சென்றது. அது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை கொடுத்தது. 


Advertisement

இலக்கை எதிர்த்து விளையாடிய போதும் எளிமையாக ரன்களை அடித்துவிட்டோம். இன்று நாங்கள் அனைவருமே சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திவிட்டோம். கடந்த போட்டிக்கும், இந்தப் போட்டிக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. கிரிக்கெட் என்பதே வேறுபாடு கொண்டது தான். இந்தியா போன்ற ஒரு அணியை இன்று வென்றது பெருமையாகவுள்ளது. இந்து ஒரு கடினமான சாவல். உலகின் சிறந்த அணியுடன் மோதிய அனுபவமாகவும், எங்கள் திறனை மேம்படுத்திக்கொள்ளும் வாய்ப்பாகவும் இதைக் கருதுகிறோம்” என்றார். 

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 30.5 ஓவர்களில் 92 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூஸிலாந்து அணியில் ட்ரெண்ட் போல்ட் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இதையடுத்து பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி 14.4 ஓவர்களில் இலக்கை எளிமையாக எட்டியது. அந்த அணியில் நிகோல்ஸ் 30 (42) மற்றும் ராஸ் டைலர் 37 (25) ரன்கள் எடுத்தனர். 5 விக்கெட்டுகளை வீழ்த்திய போல்ட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close