[X] Close

திருமணநாள் விழாவை அமெரிக்காவில் கொண்டாடிய விஜயகாந்த் - பிரேமலதா

today-29-th-wedding-anniversary-for-vijayakanth-premalatha

விஜயகாந்த் - பிரேமலதாவின் 29 வது திருமணநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

‘புரட்சிக் கலைஞர்’ எனவும், ‘கேப்டன்’ எனவும் அழைக்கப்படும் விஜயகாந்த் தமிழ் திரைப்படத்துறையில் ஒரு விர்க்க முடியாத நடிகராகவும் வலம் வந்தார். 


Advertisement

தனது சிம்மக்குரலால் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர். இவர் நடித்த சட்டம் ஒரு இருட்டறை, நூறாவது நாள், வைதேகி காத்திருந்தால், அம்மன் கோவில் கிழக்காலே, ஊமைவிழிகள், செந்தூரப் பூவே, சத்ரியன், கேப்டன் பிரபாகரன், சின்ன கவுண்டர், என்னாசை மச்சான், உளவுத்துறை, வானத்தைப் போல, ரமணா, சொக்கத்தங்கம் போன்ற பல படங்கள் இன்றளவும் பேசப்பட்டு வருகின்றன.

விஜயகாந்த், 1990 ஆம் ஆண்டில் பிரேமலதாவை திருமணம் செய்துகொண்டார். 2006 ஆம் ஆண்டு, தமிழகத சட்டமன்றத் தேர்தலில், ‘விருதாசலம்’ தொகுதியிலும், 2011 ஆம் ஆண்டு ‘ரிஷிவந்தியம்’ தொகுதியிலும் வெற்றிப்பெற்று, தமிழக சட்டப் பேரவை உறுப்பினராகவும், எதிர்கட்சித் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

ஒரு நடிகராகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு தமிழ் நாட்டு அரசியலில் தே.மு.தி.க கட்சியை உருவாக்கி, குறுகிய காலத்திற்குள் மாபெரும் வெற்றிக்கண்ட விஜயகாந்த் தற்போது உடல்நலத்தில் குன்றி காணப்படுகிறார்.

இதற்காக அடிக்கடி அமெரிக்கா சென்று சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். ஏற்கெனவே ஒரு முறை விஜயகாந்த் சிகிச்சைக்காக சென்றிருந்தபோது முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். அப்போது நேரில் வரமுடியாத விஜயகாந்த் வீடியோ மூலம் கண்ணீர் விட்டு தனது சோகத்தை வெளிப்படுத்தினார். 

சிகிச்சை முடிந்த பின்பு சென்னை திரும்பியதும் நேராக மெரினாவில் உள்ள கருணாநிதியின் சமாதிக்கு சென்று  மலர் தூவி மரியாதை செலுத்தினார். அந்த நேரம் விஜயகாந்த் உடல்நலம் முடியாமல் மிகவும் பொறுமையாக மனைவி பிரேமலதாவின் துணையுடன் நடந்த காட்சிகள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் இரண்டாம் கட்டமாக சிகிச்சைக்காக விஜயகாந்த் அமெரிக்கா சென்றார். அங்கு ஒரு மாத காலம் தங்கி சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே அவ்வபோது வந்த விழாக்களுக்கு விஜயகாந்தின் வாழ்த்துகளும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரப்படுகின்றன.

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாடியது முதல், 'ஆக்வாமேன்' படத்தைத் தனது மனைவி பிரேமலதாவுடன் ஐமேக்ஸ் திரையரங்கில் ரசித்தது வரை விஜயகாந்த் வெளியிட்ட படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகின.

இந்நிலையில், விஜகாந்த் - பிரேமலதாவின் 29 வது திருமணநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை விஜயகாந்தும் பிரேமலதாவும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close