விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் கோவிலை ஒரு பிரிவினர் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறி 8 சமுதாயகங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமானோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே புதுப்பாளையம் அருள்மிகு மாரியம்மன் கோயில் உள்ளது. அரசு அறநிலையத் துறைக்கு சொந்தமான இக் கோயில் அறங்காவல் குழுவில், நகரில் உள்ள 10 சமுதாய மக்கள் இருக்க வேண்டும் என அறநிலையத்துறை அறிவுறுத்தி உள்ளது. சித்திரை மாதம் 11 நாட்கள் நடைபெறும் திருவிழா மற்றும் ராஜ கோபுரம் கட்டுதல், புதிய கொடி மரம் அமைத்தல் போன்ற கோயில் திருப்பணிகளை அனைத்து சமுதாய மக்களும் இணைந்து செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
ஆனால் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள் மட்டுமே பல ஆண்டுகளாக அறங்காவல் குழுவில் இருந்து வருகிறார்கள். மேலும் கடந்த வருடம் நடைபெற்ற கோயில் கும்பாபிஷேக பணிகளிலும் பிற சமூகத்தினர் கலந்து கொள்ள எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பிற சமூகத்தை சேர்ந்த பொது மக்கள் பல நாட்கள் தொடர்ந்து போராடியதை அடுத்து நடந்த சமாதான கூட்டத்தில் சமரசம் ஏற்பட்டது.
இதனை அடுத்து வரும் 29ம் தேதி தொடங்கி 11 நாட்கள் சித்திரை திருவிழா நடைபெற உள்ளது. இந் நிலையில் அறங்காவல் குழுவிலும், கோயில் திருப்பணிகளிலும் பிற சமூகத்தினரை ஏற்றுக் கொள்ள குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் தற்போது மறுத்து விட்டனர்.இதனால் ஆத்திரம் அடைந்த மற்ற 8 சமூகத்தினர் இன்று முதல் கோயில் உள்ளே கால வரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர். 500 பெண்கள் உட்பட 800க்கும் மேற்பட்ட பொது மக்கள் இப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.உடனடியாக அறங்காவல் குழுவை கலைத்து விட்டு, அரசு அறநிலையத்துறை அதிகாரி நியமிக்கப்பட்டு சித்திரைத் திருவிழா நடத்தப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி