கோவா முதல்வர் மனோகர் பரிக்கரை சந்தித்தது குறித்து தாம் எந்த தகவலையும் பொதுவெளியில் பகிரவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.
ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இது தொடர்பான ரகசிய ஆவணங்கள் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சரான மனோகர் பரிக்கரிடம் இருப்பதாக தெரிவித்து வருகிறார்.
இதைத்தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி கோவாவில் ஓய்வு எடுத்து வருகிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் 3 நாள் பயணமாக கோவா சென்றுள்ளார்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் முன்னாள் இராணுவ அமைச்சராகவும் தற்போது கோவா முதலமைச்சராகவும் உள்ள மனோகர் பரிக்கரை ராகுல் காந்தி சந்தித்து நலம் விசாரித்தார்.
இதைத்தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி ரஃபேல் ஒப்பந்தத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த தன்னிடம் பிரதமர் மோடி எதுவுமே தெரிவிக்கவில்லை என மனோகர் பரிக்கர் கூறியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
இதன் மூலம் அனில் அம்பானிக்காக பிரதமர் மோடி செய்த தவறு வெளிச்சத்துக்கு வந்து விட்டதாகவும் ராகுல் தெரிவித்தார்.
இதையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு கோவா முதல்வர் மனோகர் பரிக்கர் 2 பக்க கடிதம் எழுதியுள்ளார்.
அதில், தன்னை சந்தித்த போது ரஃபேல் தொடர்பாக ராகுல்காந்தி எதுவும் பேசவில்லை என்றும் எங்கள் சந்திப்பு வெறும் 5 நிமிடங்கள் தான் நடைபெற்றது எனவும் தெரிவித்திருந்தார்.
உடல்நலம் விசாரிக்கவே தன்னை வந்து சந்தித்தாக கருதினேன் எனவும் சந்திப்பின் பின்னணியில் அரசியல் காரணம் உள்ளதை எண்ணி வருந்துகிறேன் எனவும் மனோகர் பரிக்கர் குறிப்பிட்டிருந்தார்.
உண்மைக்கு மாறான தகவலை மலிவான அரசியல் ஆதாயங்களுக்காக ராகுல் காந்தி கூறியதாகவே தான் கருதுவதாகவும்
ரஃபேல் விமான ஒப்பந்தம் விதிமுறைப்படி நடந்ததாகவே தான் எப்போதும் கூறி வருவதாகவும் பரிக்கர் கூறியிருந்தார்.
இந்நிலையில், ராகுல்காந்தி மனோகர் பாரிக்கருக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும், அது முழுக்க முழுக்க தனிப்பட்ட முறையிலான சந்திப்பு என்றும் ராகுல் குறிப்பிட்டுள்ளார். சந்திப்புக்கு பின்னர் இரண்டு முறை மக்கள் மத்தியில் பேசியதாகவும், ரஃபேல் தொடர்பாக முன்னர் பரிக்கர் தெரிவித்த கருத்துகளையே அப்போது கூறியதாகவும் ராகுல் விளக்கம் அளித்துள்ளார்.
Loading More post
'மதரஸா' என்ற வார்த்தையே இருக்கக் கூடாது - முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா
சென்னை: பைக்கில் பின்னால் அமர்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினால் அபராதம்
`இங்க இருக்க பயமாருக்கு ப்பா’- கேரள விஸ்மயாவின் கடைசி வார்த்தைகள்; வழக்கில் இன்று தீர்ப்பு
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
பழங்குடியின பள்ளி மாணவி மீது இளைஞர் சரமாரி தாக்குதல் - முதல்வர் அதிரடி உத்தரவு
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்