திருச்சி சமயபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கிக் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ, வெல்டிங் மெஷின் ஆகியவை திருடப்பட்டது என தெரியவந்துள்ளது
திருச்சி சமயபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில், 5 லாக்கர்கள் உடைக்கப்பட்டு சுமார் 500 சவரன் நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கி மேலாளார் அறையிலிருந்த கணினியின் ஹார்டு டிஸ்க்கும் கொள்ளையடிக்கப்பட்டதால், வங்கியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வங்கியின் அருகிலுள்ள கடைகள், பள்ளிகளில் உள்ள சிசிடிவிகளில் பதிவாகி உள்ள காட்சிகள் ஆய்வு செய்யப்படுகின்றன.
இந்நிலையில் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ, வெல்டிங் மெஷின் ஆகியவை திருடப்பட்டது என தெரியவந்துள்ளது. சங்கிலியாண்டபுரத்தில் இருந்து லோடு ஆட்டோவையும், செந்தண்ணீர்புரத்தில் இருந்து வெல்டிங் மிஷினையும் திருடி கொள்ளையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆட்டோவை காணவில்லை என பாலக்கரை காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கச் சென்ற ஆட்டோ உரிமையாளரை ஆய்வாளர் இல்லை என்றுகூறி காவலர்கள் திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் லாக்கரில் உள்ள பொருட்கள் பாதுகாப்பாக உள்ளதா என சரிபார்த்தனர். வங்கி நிர்வாகத்தின் அனுமதியைப் பெற்று, தங்களின் லாக்கரில் உள்ள நகைகள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை நேரில் பார்த்து உறுதிசெய்தனர். வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் கூடியதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தங்கள் பொருட்களுக்கு வங்கியில் பாதுகாப்பு இல்லை எனக் கூறி, வாடிக்கையாளர்கள் சிலர் லாக்கரில் வைத்திருந்த தங்கநகைகள், வெள்ளிப்பொருட்கள், பணம், முக்கிய ஆவணங்கள் போன்றவற்றை எடுத்துச் சென்றனர்.
Loading More post
HDFC வாடிக்கையாளர்கள் கணக்கில் ரூ.13 கோடி வரவு எப்படி?- வங்கி அதிகாரிகள் விளக்கம்
தோனி, ரோகித், கோலி இல்லாத முதல் ஐபிஎல் பைனல்!
”என் தந்தையின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் என் மீது ரெய்டு” - கார்த்தி சிதம்பரம்
'ஆத்திகர், நாத்திகர்கள் ஒரு சேர உருவாக்கியதுதான் திராவிட மாடல்' - அமைச்சர் சேகர் பாபு
பெர்முடா முக்கோணத்தில் கப்பல் காணாமல் போனால் பணம் ரீஃபண்ட்! அறிவிப்பும் கேள்விகளும்!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி