ஒகேனக்கல்லில் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த நபர், கிராம நிர்வாக அலுவலர் முன் சரணடைந்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன்-ராஐம்மாள் தம்பதியினர். ராஐம்மாள் (52) ஒகேனக்கல் அரசு பள்ளியில் சத்துணவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர்களுக்கு அதே பகுதியை செர்ந்த முனியப்பன் மகன் காமராஜ் என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது. அதன் காரணமாக அடிக்கடி பிரச்னை ஏற்பட்டும் வந்தது. இந்தச் சூலலில் இன்று காலை தனது வீட்டில் தனியாக இருந்த ராஐம்மாளை, காமராஜ் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து கொலையாளி காமராஜ் ஒகேனக்கல் வி.ஏ.ஓ முருகேசனிடம் சரணடைந்து வாக்குமூலம் அளித்தார். அப்போது சொத்து தகராறு காரணமாக ராஐம்மாளின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக அவரது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
அதன்பின் வி.ஏ.ஓ முருகேசன் ஒகேனக்கல் போலீஸாருக்கு கொடுத்த தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார், உடலை கைப்பற்றி பிரோத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் ஒகேனக்கல் பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒகேனக்கல் பகுதியில் இரண்டு மாதத்தில் இரண்டு கொலை நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!