கோடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக, தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் மீதான வழக்கு விசார ணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை மற்றும் பணியா ளர்கள் மரணம் தொடர்பாக ’தெஹல்கா’வின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் மேத்யூ, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். இதையடுத்து மேத்யூ சாமுவேல், மனோஜ், சயான் ஆகியோர் மீது சென்னை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், மேத்யூ சாமுவேல் மீது முதலமைச்சர் பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். ரூ1.10 கோடி இந்த வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மேத்யூ சாமுவேல், சயான், மனோஜ் உள்ளிட்ட 7 பேர், முதலமைச்சர் பழனிசாமி குறித்து பேச தடை விதித்து, வழக்கு விசாரணையை 30ம் தேதிக்கு ஒத்தி வைத்தது
இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி மேத்யூ சாமுவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், எந்த உள்நோக்கமும் இல்லாமல்தான் ஆவணப் படத்தை வெளியிட்டதாக மேத்யூ சாமுவேல் சார்பில் தெரிவிக்கப்பட்டது. முதலமைச்சருக்கு எதிராக, தவறான குற்றச்சாட்டைப் பரப்பியதால், இரு கட்சியினரிடையே மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டதால் சட்டத்துக்குட்பட்டு வழக்குப் பதிவு செய்ததாகக் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதா, இல்லையா என்பது குறித்த முடிவை தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை, விசார ணைக்கு ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம், 4 வார காலத்துக்கு சாமுவேல் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத் தரவிட்டது.
Loading More post
”அடுத்த சீசனில் இந்த இளம் பவுலர் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார்” - தோனி சொன்ன அந்த வீரர்?
‘நான் சொன்ன கருத்தைத்தான் பிரதமரும் எதிரொலிக்கிறார்‘ - கிச்சா சுதீப்பின் புதிய கமெண்ட்!
மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களை தேர்வுசெய்வதில் அதிமுகவில் நீடிக்கும் இழுபறி!
இம்ரான் தாஹிரின் மிகப்பெரிய சாதனையை சமன் செய்தார் சாஹல்! என்ன சாதனை?
லக்னோவில் 10 நாட்களுக்கும் மேலாக தாயின் சடலத்துடன் வசித்த மகள்! என்ன காரணம்?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!