[X] Close

நீதித்துறை பணியாளர்கள் வேலை நிறுத்தம் கூடாது: சென்னை உயர்நீதிமன்றம்

chennai-high-court-warns-Judiciary-workers-on-strike

ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் நீதித்துறையை சேர்ந்த அதிகாரிகளோ, ஊழியர்களோ கலந்துகொள்ளவில்லை என்பதை உறுதி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Advertisement

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த 22-ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் நீதித்துறையை சேர்ந்த அதிகாரிகளோ, ஊழியர்களோ கலந்துகொள்ளவில்லை என்பதை உறுதி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் சி.குமரப்பன் பிறப்பித்துள்ளார்.


Advertisement

வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது என்பதை உறுதி செய்ய மாவட்ட முதன்மை நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிமன்ற நீதிபதிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 29-ஆம் தேதி முதல் ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு ஆதரவாக கருப்பு பேட்ஜ் அணிந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு நீதித்துறை பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் மற்றும் மாநில பொதுச் செயலாளர் அளித்த நோட்டீஸ்களை பரிசீலித்த தலைமை பதிவாளர் இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். எச்சரிக்கையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிப்பாணையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Advertisement

 


Advertisement

Advertisement
[X] Close