[X] Close

25-ல் முழு அடைப்புப் போராட்டம்: திமுக கூட்டிய கூட்டத்தில் முடிவு

Details-of-17-resolution-passed-at-DMK-s-all-party-meeting

விவசாயிகள் நலனை காக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் 25-ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என திமுக இன்று கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

விவசாயிகள் பிரச்னையை முன்னிறுத்தி திமுக சார்பில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன். மார்க்சிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர். இதில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் 15 தீர்மானங்கள் விவசாயிகள் பிரச்னை பற்றியதாகும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்க வலியுறுத்தி ஏப் 22-ஆம் தேதி அனைத்துக்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறும்; விவசாயிகள் நலனை காக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் 25-ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close