
டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் இன்று வளையல் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேசிய வங்கிகள் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் 34-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமான போராட்டத்தை முன்னெடுக்கும் விவசாயிகள், இன்று வளையல் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.