ஆசிரியர்கள் இன்றைக்குள் பணிக்குத் திரும்பாவிட்டால் அவர்களது பணியிடங்கள் காலியானதாக கருதப்படும் என அரசு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. அதை ஏற்காத ஜாக்டோ ஜியோ அமைப்பினர், அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த 22-ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் இன்றைக்கு பணிக்குத் திரும்ப இறுதியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறை சார்பில் அறிக்கை வெளிடப்பட்டுள்ளது. அதில் பணிக்குத் திரும்பாத ஆசிரியர்களின் பணியிடங்கள், காலிப்பணியிடங்களாக கருதப்பட்டும் என்ற முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. உத்தேச காலிப்பணியிடப் பட்டியல் தயார் செய்ய அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த தற்காலிக ஆசிரியர்களை 10,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேவேளையில் தற்காலிக ஆசிரியர்கள் பணிக்கு இன்று வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளதால் தமிழகம் முழுவதும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் பட்டதாரிகள் குவிந்துள்ளனர்.
இது ஒருபுறமிறக்க ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டங்களைத் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றனர். உடனடியாக தங்களை அழைத்து பேச வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பும், ஜாக்டோ ஜியோ அமைப்பும் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
போராட்டம் தொடர்ந்துகொண்டே இருப்பதால் அதை முடிவிற்கு கொண்டு தமிழக அரசு தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. ஜாக்டோ ஜியோ முக்கிய நிர்வாகிகளை கைது செய்த தமிழக அரசு, பணியிடை நீக்கமும் செய்து வருகிறது. இந்நிலையில் இன்றைக்குள் போராட்டம் முடிவிற்கு வராவிட்டால் அடுத்தகட்டமாக தற்காலிக ஆசிரியர்களை பணியமர்த்தும் பணியிலும் ஈடுபட்டுள்ளது.
Loading More post
விடுதலை ஆனார் பேரறிவாளன்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா: ஏ.ஆர்.ரஹ்மான், கமலஹாசனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு
'மோதிக்கொண்ட கல்லூரி பேருந்து - தனியார் பேருந்து..'. பதைபதைக்கவைக்கும் சிசிடிவி காட்சிகள்
``என் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்”- மறுமணம் குறித்து டி.இமான் நெகிழ்ச்சி பதிவு
``திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை பேச்சு
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்