மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.
ரூ.1,264 கோடியில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனையில் 750 படுக்கை வசதி, 100 எம்.பி.பி.எஸ். கல்வி இடங்கள் உள்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இந்த மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா, மதுரை மண்டேலா நகரில் இன்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பின்னர் மோடி அங்கிருந்து கிளம்பி சென்றார். அப்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கோரிக்கைகள் அடக்கிய மனு ஒன்றினை பிரதமர் மோடியிடம் கொடுத்தார்.
அதில், “ ஜெயலலிதா, அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் பெயரை சூட்ட வேண்டும். கர்நாடக அரசு அளித்த மேகதாது திட்ட விரிவான அறிக்கையை ரத்து செய்ய வேண்டும். அணை பாதுகாப்பு மசோதா தயாரிப்பு பணியை நிறுத்தி வைக்க வேண்டும். முல்லை பெரியாறு ஆற்றில் புதிய அணை கட்ட ஆய்வுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும். ஒசூர், நெய்வேலி, ராமநாதபுரம் நகரங்களில் உதான் திட்டம் கீழ் விமானம் சேவை தேவை. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது திட்டத்தில் 50:50 கூட்டுத் திட்டத்தில் அனுமதி அளிக்க வேண்டும். சேலம் உருக்காலையின் காலியிடத்தில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையம் அமைக்க வேண்டும். கஜா புயல் பாதிப்புக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். 14 ஆவது நிதிக்குழு தர வேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். பட்டாசு தொழிலை பாதுகாக்கவும், 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கவும் வேண்டும்.” என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்களை வலியுறுத்தியுள்ளார்.
Loading More post
``தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது ஏன்?”-அறங்காவலர் பதவி ஏற்பில் கண்டித்த அமைச்சர் துரைமுருகன்
நீட் தேர்வு: விண்ணப்பிக்கும் அவகாசம் மே 20 வரை நீட்டிப்பு
பாகிஸ்தானில் இரு சீக்கியர்கள் சுட்டுக்கொலை - தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு
'கிருபானந்த வாரியாருக்கு நேர்ந்த நிலை அண்ணாமலைக்கு ஏற்படும்' ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை
சஹா அரைசதம்! சிஎஸ்கேவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபாரம்!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?