[X] Close

வாக்குப்பதிவு இயந்திரத்தில் 100% மோசடி செய்ய முடியும்: சந்திரபாபு நாயுடு

-It-Is-Easy-To-Misuse-Technology---Chandrababu-Naidu-On-EVMs

வாக்குப்பதிவு இயந்திரத்தில் நூறு சதவிகிதம் மோசடி செய்ய முடியும் என்று ஆந்திரபிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.


Advertisement

நாடாளுமன்ற தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவதற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக தெலுங்குதேசம் கட்சித்தலைவரும், ஆந்திர முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடுவும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். 


Advertisement

அமராவதியில் தனது கட்சி எம்.பிக்கள் பங்கேற்றக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், ‘தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன் படுத்துவது எளிது. அதுவும் அந்த சாப்ட்வேர் புரோகிராமை எழுதியவரால் அதில் மோசடி செய்ய முடியும். அந்த வகையில் இதில் நூறு சதவிகிதம் முறைகேடு செய்ய முடியும். தேர்தல் ஆணையம் என்பது நடுவர் போன்று தான் செயல்படவேண்டும்.

நம்பிக்கை இல்லாத ஒரு முறையை அது நடைமுறைப்படுத்தக் கூடாது. அதனால்தான் அதை பல கட்சிகள் எதிர்க்கின்றன. அரசியல் கட்சிகள் மக்களின் கோரிக்கைகளைத்தான் எழுப்புகின்றன. வளரச்சி அடைந்த நாடுகளில் கூட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பயன்படுத்தவில்லை. அதனால் நம்பிக்கை இல்லாத ஒன்றை செயல்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அழுத்தம் கொடுக்கக் கூடாது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தினால் அனைவருக்கும் ஒப்பு கைச் சீட்டு வழங்க வேண்டும். இல்லையென்றால் வாக்குச்சீட்டு முறையையே பின்பற்ற வேண்டும். இதுபற்றி அனைத்து எம்.பிக்களும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும்’’ என்றார்.


Advertisement
Related Tags : Chandrababu NaiduTechnologyMisuse

Advertisement

Advertisement
[X] Close