[X] Close

ஆபாசமா எழுதறாரு: ஃபேஸ்புக் போலீஸ் மீது பெண் புகார்

women-make-complaint-on-Police

பேஸ்புக்கில் தன்னைப் பற்றி ஆபாசமாக எழுதிவருவதாக பெண் ஒருவர், போலீஸ்காரர்கள் மீது கொடுத்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

கோவையை சேர்ந்தவர் மகாலாட்சுமி (வயது 40). இவர் கோவை போலீஸ் துணை கமிஷனர் லட்சுமியிடம் நேற்று ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த சிவரவிச்சந்திரன், ஈஸ்வரன் தலைமையில் பேஸ்புக் குரூப் ஒன்று உருவாக்கப்பட்டது. அதில் இணைந்தேன். குரூப்பில் இருந்த 30 பேர் கடந்த 2 மாதத்துக்கு முன் டூர் சென்றோம். அப்போது நாங்கள் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டோம்.

இந்நிலையில் சிவரவிச்சந்திரனும் ஈஸ்வரனும் பிரிந்துவிட்டனர். ஈஸ்வரன் சென்னையில் போலீசாக பணியாற்றுகிறார். இவர், என்னையும் சிவரவிச்சந்திரனையும் இணைத்து பேஸ்புக்கில் ஆபாசமாக எழுதிவருகிறார். புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். இதற்கு கோவையில் போலீசாக பணியாற்றும் அவரது நண்பரும் உடந்தையாக இருக்கிறார். இதுபற்றி ஈஸ்வரனிடம் கேட்டபோது, நான் போலீஸ். உன் மீது பொய் வழக்குப் போட்டு சிறையில் தள்ளுவேன் என மிரட்டுகிறார். கோவையை சேர்ந்த அவர் நண்பரும் மிரட்டுகிறார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close