[X] Close

அமெரிக்காவில் ஷாரூக் கற்றுக்கொடுத்த லுங்கி டான்ஸ்

Shah-Rukh-Khan-Teaches-Lungi-Dance-To-Rush-Hour-Maker-Brett-Ratner

நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து பிரபல ஹாலிவுட் இயக்குநர் லுங்கி டான்ஸ் நடனம் ஆடியது ரசிகர்களை கவர்ந்தது.

ஷாரூக் கான், தீபிகா படுகோன் நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம், ‘சென்னை எக்ஸ்பிரஸ்’. ரோகித் ஷெட்டி இயக்கி இருந்த இந்தப் படத்தில் ரஜினியின் புகழ்பாடும் லுங்கி டான்ஸ் என்ற பாடல் இடம்பெற்றது. சூப்பர் டூப்பர் ஹிட்டான இந்தப் பாடலுக்கு எப்படி டான்ஸ் ஆடுவது என்பது பற்றி ஹாலிவுட் இயக்குனருக்கு ஷாரூக் கான் கற்றுக்கொடுத்தார்.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறும் திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராக ஷாருக்கான் பங்கேற்றார். அப்போது, X-Men:The Last Stand என்ற ஹாலிவுட் படத்தின் இயக்குநர் ப்ரெட் ராட்னருக்கு தனது லுங்கி டான்ஸ் நடனத்தை ஷாருக் கான் கற்றுக்கொடுத்தார். அப்போது இருவரும் லுங்கி டான்ஸ் பாடலுக்கு சிறிதுநேரம் நடனமாடி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close