[X] Close

நாங்க என்ன தீவிரவாதியா? போலீசார் மீது மாணவிகள் புகார்

Students-blame-Police

காவல்துறையினர் தங்களை தீவிரவாதி போன்று சித்தரித்து கைது செய்ததாக போலீசார் மீது மாணவிகள் புகார் கூறினர்.

கல்லூரி மாணவ, மாணவிகள் 4 பேர், பல் மருத்துவர் ஒருவர் உள்ளிட்ட 7 பேர் கோவையில் இருந்து ரயில் மூலம் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசலில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க நேற்று சென்றுகொண்டிருந்தனர். ‌இதையறிந்த காவல்துறையினர் கோவையில் இருந்தே அவர்களை கண்காணித்து வந்தனர். ரயில், கரூர் வந்ததும் அந்த இளைஞர்கள்‌ இருந்த பெட்டியைச் சுற்றி காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். ரயில் குளித்‌தலையில் நின்றபோது மாணவிகள் இருவர் உட்பட 7 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அரசுக்கு எதிராக கலகத்தை விளைவிக்கும் வகையில் செயல்படுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடு‌த்தல் உள்ளிட்ட பிரிவுகளில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, கரூர் 2வது குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதி ரேவதி முன் ஆஜர்படுத்தினர். அப்போது தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று இளைஞர்கள் முறையிட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, 7 பேரையும் 28ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையிலடைக்க உத்தரவிட்டார்.

கைது செய்யப்படுவதற்கு முன் கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய மாணவி ஒருவர், காவல்துறையினர் தங்களை தீவிரவாதி போன்று சித்தரித்து கண்காணித்து கைது செய்ததாகத் தெரிவித்தார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close