[X] Close

எம்.எல்.ஏ. தலைக்கு ரூபாய் 50 லட்சம் அறிவித்தவர் மீது வழக்குப்பதிவு

FIR-against-ex-BSP-leader-Vijay-Yadav-for--beheading--remark-on-BJP-s-Sadhana-Singh

உத்தரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினரின் தலையை வெட்டிக் கொண்டு வருபவருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை என அறிவித்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதாவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சாதனா சிங். இவர் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியை மிக மோசமாக விமர்சித்து பேசியிருந்தார். அதவாது, பெண்கள் இனத்திற்கே மாயாவதி ஒரு கறை என தெரிவித்திருந்தார். அத்துடன் மாயாவதி ஒரு ஆணும் இல்லை. பெண்ணும் இல்லை. மூன்றாம் பாலினத்வர் போல உள்ளார் என மிகவும் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். அவரின் இத்தகைய பேச்சுக்கு பல விமர்சனங்கள் எழுந்தன. தேசிய மகளிர் ஆணையம் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து விளக்கம் அளிக்க சாதனா சிங்கிற்கு நோட்டீஸ் அனுப்பியது.


Advertisement

இதனிடையே பதிலுக்கு போட்டியாக, சாதனா சிங்கின் தலைக்கு போட்டியாக பரிசு அறிவித்தார் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ விஜய் யாதவ். இதுகுறித்து அவர் பேசும்போது, “ சாதனா சிங் நாட்டில் உள்ள பெண்கள் மற்றும் மாயாவதியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் போராட்டம் நடத்துவோம். யார் சாதனா சிங்கின் தலையை வெட்டிக் கொண்டு என்னிடம் வருகிறார்களோ அவருக்கு எனது ஆதரவாளர்களிடம் இருந்து பணத்தை திரட்டி ரூ.50 லட்சம் தருவேன்” என தெரிவித்தார். விஜய் யாதவ்வின் இத்தகைய பேச்சும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது குறித்து பாரதிய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான ராஜீவ் கல்ரா கொடுத்த புகாரின் பேரின் விஜய் யாதவ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மொரதாபாத் போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட வருகின்றனர்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close