Published : 15,Apr 2017 02:32 PM
பரோல் கேட்காத சசிகலா

மகாதேவன் இறுதிச்சடங்கில் பங்கேற்க சசிகலா பரோல் கேட்கவில்லை என அதிமுக அம்மா அணியின் கர்நாடக மாநிலத் தலைவர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளரான சசிகலாவின் 2ஆவது அண்ணன் வினோதகனின் மகனான மகாதேவன் தஞ்சாவூரில் இன்று திடீரென மரணமடைந்தார். நாளை நடைபெற உள்ள அவரது இறுதிச் சடங்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா பரோலில் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், சசிகலா பரோல் கேட்கவில்லை. அதனால் இறுதிச்சடங்கில் அவர் பங்கேற்க வாய்ப்பில்லை. சகோதரன் மகனின் இறப்பால் சசிகலா ஆழ்ந்த வருத்தத்தில் இருக்கிறார் என அதிமுக அம்மா அணியின் கர்நாடக மாநிலத் தலைவர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.