கோடநாடு கொலை, கொள்ளை குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கோடநாடு கொள்ளை மற்றும் கொலை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக சார்பில் சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே போராட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகில் இருந்து பேரணியாக சென்று ராஜ்பவனை முற்றுகையிட திட்டமிடப்பட்டது.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டு, கிண்டி ரேஸ்கோர்சுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்தார். அப்போது பேசிய ஸ்டாலின் கோடநாடு கொலை, கொள்ளை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
முன்னதாக, கோடநாடு விவகாரம் தொடர்பாக தெஹல்கா ஊடகத்தின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல்ஸ் வெளியிட்டு வீடியோ ஒன்று பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இதற்கு முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டதுடன், வழக்கும் தொடரப்பட்டது. இதுதொடர்பாக கோடநாடு கொள்ளை விவகாரத்தில் வழக்கு பதியப்பட்டுள்ள சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
Loading More post
ராக்கெட்டுகளை ஏவுவதற்கு குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்தது ஏன்?-இஸ்ரோ விஞ்ஞானி புதிய தகவல்
’குழந்தைகள் மார்க் விஷயத்தில் பெற்றோர்கள் இதை மட்டும் செய்யாதீங்க’- அமைச்சர் அன்பில் மகேஷ்
காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை! - நீதிமன்றம்
தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி ராஜன் நியமனம்!
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்