முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி 300 ரன்களை எடுப்பார்கள் என நினைத்ததாக இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.
நியூஸிலாந்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது தொடர்பாக பேசிய கோலி, “எங்களது சிறப்பான ஆட்டங்களில் இதுவும் ஒன்று. பந்துவீச்சில் இதைவிட சிறப்பான ஒன்றை வெளிப்படுத்த முடியாது. நான் டாஸை இழந்தபோது, எப்படியும் நியூஸிலாந்து 300 ரன்கள் அடித்துவிடுவார்கள் என நினைத்தேன். ஆனால், அதில் பாதி இலக்கான 150-களிலேயே அவுட் ஆகியது சிறப்பானது. பந்து வீசுதற்கு முன்பு ஷமி சில நுணுக்கங்களை சொன்னார். இப்படி ஒரு வேகப் பந்துவீச்சை வைத்துக்கொண்டு எந்த அணியையும் மடக்கிவிடலாம் என்ற நம்பிக்கை தற்போது அதிகரித்துவிட்டது.
சுழற்பந்து வீச்சாளர்களின் செயல் மிக அருமையானது. ஏனென்றால் இரண்டாவது பேட்டிங் செய்யும் போது தான் பிட்ச் சரியான நிலையை அடைந்தது. ஆனால் அதற்கு முன்பே நமது சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திவிட்டனர். ஷிக்கர் தவானை இங்கு குறிப்பிட்டு கூறி ஆக வேண்டும். வெயிலால் இடைவேளை எடுத்தபோது, விரைவாக போட்டியை முடித்துவிடுகிறேன் என அவர் கூறினார். தவான் ஃபார்மில் இருந்தால் பயங்கரமான (சிறப்பான) வீரர்” என்றார்.
முன்னதாக, இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி 157 அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் கேப்டன் வில்லியம்சன் மட்டும் 64 (81) ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். இதையடுத்து விளையாடிய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் தவான் 75 (103) மற்றும் கேப்டன் கோலி 45 (59) ரன்கள் எடுத்தனர். போட்டியின் ஆட்ட நாயகனாக முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றிய ஷமி தேர்வு செய்யப்பட்டார்.
Loading More post
``தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது ஏன்?”-அறங்காவலர் பதவி ஏற்பில் கண்டித்த அமைச்சர் துரைமுருகன்
நீட் தேர்வு: விண்ணப்பிக்கும் அவகாசம் மே 20 வரை நீட்டிப்பு
பாகிஸ்தானில் இரு சீக்கியர்கள் சுட்டுக்கொலை - தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு
'கிருபானந்த வாரியாருக்கு நேர்ந்த நிலை அண்ணாமலைக்கு ஏற்படும்' ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை
சஹா அரைசதம்! சிஎஸ்கேவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபாரம்!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?