Published : 22,Jan 2019 08:27 AM
’காதல், பல கதைகளை கொடுக்கிறது’: திருமண நாளில் நடிகை பாவனா பளீச்!

நடிகை பாவனா, தனது முதல் வருட திருமண நாளை, கணவருடன் இன்று கொண்டாடி வருகிறார்.
தமிழ், மலையாள, கன்னட சினிமாவில் பிரபலமான ஹீரோயினாக வலம் வந்தவர் பாவனா. கன்னடத்தில் இவரது முதல் படத்தை தயாரித்த வர் நவீன். இவருக்கும் பாவனாவுக்கும் காதல் மலர்ந்தது. பல வருடங்களாகக் காதலித்து வந்தனர். பின் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இவர்களின் திருமணத்துக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து கடந்த வருடம் ஜனவரி மாதம் 22 ஆம் தேதி திரு மணம் செய்து கொண்டனர். இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்த பாவனா, இப்போது மீண்டும் நடிக்க திரும்பி இருக்கிறார். தமிழில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் ஹிட்டான ’96’, கன்னடத்தில் ரீமேக் ஆகிறது. இதில் கணேஷ், ஹீரோவாக நடிக்கிறார். பாவனா, ’ஜானு’வாக நடிக்கிறார். பிரீத் தம் குப்பி இயக்குகிறார். இதுபற்றி பாவனா கூறும்போது, ’இது அனைத்து மொழிக்குமான கதை. எல்லோருக்குமான கதை என்பதால் நடிக்கி றேன்’’ என்று தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே சமூக வலைத்தளங்களில் இருந்தும் விலகி இருந்த பாவனா, இன்று தனது திருமண புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட் டுள்ளார். அதில் திருமணம் முடிந்து இன்றோடு ஒரு வருடம் ஆகிவிட்டது. மகிழ்ச்சியான திருமண நாள் என்று கூறியுள்ள அவர், ’’எப்போதாவது ஒரு முறை, சாதாரண வாழ்க்கையின் நடுவே, சுவாரஸ்யமான தேவதை கதையைக் காதல் எங்களுக்கு கொடுக்கிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.