Published : 15,Apr 2017 08:02 AM
வெடிகுண்டுகளின் அம்மாவால் 90 தீவிரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் இடத்தை குறிவைத்து அமெரிக்கா வீசிய வெடிகுண்டால் 90 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லை அருகே ஐ.எஸ். தீவிரவாதிகளின் மறைவிடத்தை குறிவைத்து அமெரிக்கா குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கான பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு, அனைத்து வகையான வெடிகுண்டுகளின் அம்மா (MOTHER OF ALL BOMBS) எனக் கூறப்படுகிறது. இது அணுகுண்டு அல்லாத, பேரழிவை ஏற்படுத்தக் கூடிய பெரிய வெடிகுண்டாகும். இந்த குண்டு வீச்சில் பலியானோர்களின் எண்ணிக்கை குறித்து உடனடியாகத் தகவல் தெரிவிக்கவில்லை. இப்போது அத்தகவல் தெரியவந்துள்ளது.
’சுமார் 92 தீவிரவாதிகள் இந்த குண்டு வீச்சில் பலியாகியுள்ளனர்’ என்று ஆப்கான் பாகிஸ்தான் எல்லைப் பகுதியான அச்சின் மாவட்ட கவர்னர் இஸ்மாயில் ஷின்வாரி இன்று தெரிவித்துள்ளார்.