திமுக கூட்டும் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் பங்கேற்பு

திமுக கூட்டும் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் பங்கேற்பு
திமுக கூட்டும் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் பங்கேற்பு

திமுக கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கும் என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் வரலாறு காணாத வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தற்கொலை, அதிர்ச்சி மரணம் தொடர்கிறது. காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின் அடிப்படையில் மேலாண்மை வாரியம் அமைக்க, மத்திய அரசு மறுத்து வருகிறது. இப்பின்னணியில் தி.மு.க அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. நாளை (16.04.2017) நடைபெறவுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு முடிவெடுத்துள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை திமுக கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளன.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com