சினிமா பாணியில் பழிக்குப் பழி ! இளைஞர் மீது கொடூர தாக்குதல்

சினிமா பாணியில் பழிக்குப் பழி ! இளைஞர் மீது கொடூர தாக்குதல்
சினிமா பாணியில் பழிக்குப் பழி ! இளைஞர் மீது கொடூர தாக்குதல்


சென்னை திருவல்லிக்கேணி சூரப்பா தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகன் விஷ்ணு (19). தனது தந்தையுடன் சேர்ந்து அரிசி வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று நண்பரான அழகுராஜாவுடன் சேர்ந்து எழும்பூரில் உள்ள சிங்கப்பூர் மஹாலில் நடந்த டோலாக் பாபு என்பவரின் தம்பியான யூசுப் என்பவரின் திருமணத்தில் கலந்து கொண்டனர். 

பிறகு இன்று அதிகாலையில்  டாக்டர் பெசண்ட் ரோடு, அங்கமுத்து தெரு சந்திப்பில் அழகுராஜா, விஷ்ணு சென்று கொண்டிருந்த போது ஆட்டோவில் மறைந்து இருந்த 3 பேர் கத்தி, அரிவாளால் அழகு ராஜாவை வெட்ட முயன்றனர். ஆனால் அவர் தப்பி ஓடி விட்டார்.


இந்தச் சம்பவத்தில் உடன் வந்த விஷ்ணுவிற்கு இடது பக்க முகத்திலும் இடது முழங்கையிலும் வெட்டு காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து மயிலாப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த விஷ்ணுவை ராயப்பேட்டை அரசு மருத்துவமனயில் சேர்த்தனர். பிறகு மேல்சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு விஷ்ணு அனுப்பி வைக்கப்பட்டார்.  

இந்நிலையில் போலீஸ் விசாரணையில், அழகுராஜா, பாலாஜி ஆகியோர் தோட்டம் சேகர் மகன்கள் என்பது தெரியவந்தது. மேலும் இவர்களுக்கும் ஐஸ்ஹவுஸ் பகுதியில் தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வந்த ஷேக் என்பவருக்கும் முன் விரோதம் உள்ளது. கடந்த ஆண்டு ஷேக்கின் உறவினர் அப்பாஸ் என்பவரை இம்ரான் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து வெட்டி கொலை செய்தனர். 

இக்கொலையின் போதே ஷேக் தனது உறவினர் கொலைக்கு அழகுராஜா டீம்தான் காரணம் என சந்தேகப்பட்டதாகவும் அதனால் அழகுராஜாவை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அழகு ராஜாவை கொலை செய்ய ஷேக் தனது நண்பர்கள் அரவிந்த், அஜித், வடிவேலு, அருண் ஆகியோரை ஏவி விட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com