Published : 20,Jan 2019 11:57 AM
காட்டு யானைகளால் அச்சமடைந்த கிராம மக்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் காட்டு யானைகளின் முகாமினால் விவசாய நிலங்களில் இருந்த கத்தரிக்காய், ராகி, கோஸ் போன்ற பயிர்கள் சேதமடைந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனப்பகுதியையொட்டி 20 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் அனைத்தும் தென் பெண்ணை நதியோரம் உள்ளதால் வருடத்தில் எல்லா நாட்களிலும் அந்தப் பகுதியில் விவசாய செழித்து இருக்கும். இந்நிலையில் ஒசூர் அருகே உள்ள சானமாவு காட்டு பகுதியில் 70 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டிருந்தன. அவை தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு நேற்று முன்தினம் விரட்டப்பட்டது ஆனால் 6 யானைகள் மீண்டும் ஓசூர் வனப்பகுதிக்கு வந்தன.
அந்த யானைகள் நேற்று இரவு திரிச்சிப்பள்ளி கிராமத்தில் நுழைந்து அங்குள்ள பூசனிக்காய், சோளம், தென்னை, கத்தரிக்காய், ராகி, கோசு உள்ளிட்ட சுமார் 15 ஏக்கர் பயிர்களை சேதப்படுத்தியுள்ளன. மேலும் தோட்டங்களுக்கு அமைத்திருந்த முள் வேலிகளையும் நாசப்படுத்தியுள்ளது. இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டுயானைகள் கிராமப்பகுதிகளில் சுற்றித்திரிந்து விளைநிலங்களை சேதப்படுத்தி கிராம மக்களையும் தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றன.
இதனால் முகாமிட்டால் யானைகளை விரட்டினாலும் மீண்டும்,மீண்டும் ஓசூர் வனப்பகுதிக்கு வருகின்றன. எனவே யானைகளை வெளியேற்ற முடியாமல் வனத்துறையினர் சிறமப்படுகின்றனர். மேலும் இந்த பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை கர்நாடகா மாநில வனப்பதிக்கு விரட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காட்டு யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.