கர்நாடகாவில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணியில் விரைவில் எரிமலை வெடிக்க உள்ளதாக அம்மாநில பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. அத்துடன் சுயேட்சை எம்.எல்.ஏக்கள் சிலரும் ஆட்சிக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
இந்நிலையில் சுயேட்சை எம்.எல்.ஏக்களான ஹெச்.நாகேஷ் மற்றும் ஆர்.சங்கர் ஆகியோர் அரசுக்கு அளித்து வந்த தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றனர். கர்நாடகாவில் எம்.எல்.ஏக்கள் கட்சித் தாவல், எம்.எல்.ஏக்களை விலை பேசுதல் என்ற குற்றச்சாட்டுகளும், சர்ச்சைகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இதுகுறித்து முதலமைச்சர் குமாரசாமி பேசியிருந்தபோது, “கர்நாடகாவில் தமது ஆட்சிக்கு எவ்வித ஆபத்தும் இல்லை. பாஜகவுடன் சேர்வதாக கூறப்பட்ட 3 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் தன்னிடம் தெரிவித்துவிட்டுதான் மும்பை சென்றனர். அவர்கள் தன்னுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர்” எனத் தெரிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து சுயேட்சை எம்.எல்.ஏக்கள் இரண்டு பேர் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த இரண்டு பேரின் வாபஸினால் கர்நாடக அரசின் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 119ல் இருந்து 117 ஆக குறைந்தது. சபாநாயகருடன் சேர்த்தால் மொத்தம் 118 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
இதுகுறித்த பிரச்னையில் சுமூகத் தீர்வு காண பெங்களூரில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா, கூட்டத்தில் 76 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டதாகவும், கலந்து கொள்ளாத எம்.எல்.ஏ.க்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் எனவும் தெரிவித்தார். கர்நாடகாவில் எங்களுடைய அரசை கவிழ்க்க பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் செயல்பட்டு வருவதாகவும் அவர்கள் எங்களுடைய எம்.எல்.ஏ.க்களை தொடர்பு கொண்டு விலை பேசுவதாகவும் குறிப்பிட்டார். காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை வளைக்க ரூ.50 - 70 கோடி வரை பாஜகவினர் பேரம் பேசுவதாக குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், கர்நாடகாவில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணியில் விரைவில் எரிமலை வெடிக்க உள்ளதாக அம்மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 4 பேர் வராதது ஆளும் கூட்டணியில் நிலவி வரும் பிளவை காட்டுவதாகவும் இது சில நாட்களில் எரிமலையாக வெடிக்கும் என்றும் எடியூரப்பா தெரிவித்தார். பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 4 பேர் பங்கேற்காதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் எடியூரப்பாவின் கருத்து வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
'விரும்பினால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன்; அதை கேட்க நீங்கள் யார்?' - சித்தராமையா ஆவேசம்
ஞானவாபி மசூதி வழக்கு - வாரணாசி நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு
'திமுகவினர் கெடுவைத்தால் அண்ணாமலை கூட்டத்தில் பேச ஆள் இருக்கமாட்டார்கள்' -சுப.வீரபாண்டியன்
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்