[X] Close

செல்போன் பறித்து தப்பிய திருடன் ! மடக்கி பிடித்த போக்குவரத்து காவலர்

Traffic-cop-revives-the-theft-cell-phone

பள்ளி ஆசிரியரிடம் செல்போன் பறித்த திருடனை மடக்கி பிடித்த போக்குவரத்து தலைமைக் காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

சென்னை அண்ணாசாலை அம்ருன்னி ஷா பேகம் தெருவைச் சேர்ந்தவர் முகம்மது காசிம் (28). இவருக்கு சொந்த ஊர் ராஜஸ்தான். ஈஞ்சம்பாக்கத்தில் தனியார் பள்ளியில் கடந்த 6 மாதங்களாக அரபி ஆசிரியராக பணிபுரிகிறார். இன்று காலை நேரு ஸ்டேடியத்தில் பள்ளிக்கூட விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, பிறகு சிந்தாதிரிப்பேட்டை சிம்சன் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.அப்போது நடந்து வந்த அடையாளம் தெரியாத நபர் முகம்மது காசிம்மின் விலை உயர்ந்த செல்போனை பறித்து தப்பியோடினர். 


Advertisement

(கைது செய்யப்பட்ட மருதுபாண்டி)

திருடன் பெரியார் சிலை நோக்கி ஓடிய போது காசிம் சத்தம் போட்டார். அங்கிருந்த போக்குவரத்து தலைமைக் காவலர் கர்ணன் சற்றென யோசிக்காமல் தப்பியோடிய திருடனை மடக்கி பிடித்தார். போலீஸிடம் வசமாக சிக்கிக்கொண்ட திருடன் தப்பிக்க முடியாமல் திணறினான்.


Advertisement

(போக்குவரத்து தலைமைக் காவலர் கர்ணன்)

இதனையடுத்து தப்பியோடிய திருடனை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் போலீஸார் கர்ணன். விசாரணை நடத்தியதில் செல்போன் திருடிய நபர் தேனாம்பேட்டையைச் சேர்ந்த  மருதுபாண்டி (23) என தெரிய வந்தது. இவர் மீது ராயப்பேட்டை, அண்ணா சாலை காவல் நிலையங்களில் செல்போன் பறிப்பு வழக்குகள் உள்ளது. இவர் 6 மாதங்களுக்கு முன்பாக ஜாமீனில் வெளியில் வந்து தற்போது செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்தது காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


Advertisement

Advertisement
[X] Close