திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் கொல்கத்தாவில் இன்று நடைபெறவுள்ள பொதுக்கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் கட்சிகள் தங்களுக்குள் அணி சேர்வதற்கான அரசியல் வியூகங்களை விறுவிறுப்பாக வகுத்து வருகின்றன. உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் சேர்ந்து வலுவான அணியை அமைத்துள்ளன. 80 தொகுதிகள் கொண்ட உத்தர பிரதேசத்தில் கணிசமான தொகுதிகளை வென்று பிரதமர் பதவிக்கான போட்டியில் தன்னை வலுப்படுத்திக் கொள்ள மாயாவதி திட்டமிட்டுள்ளார்.
இதற்கிடையில் தெலங்கானா தேர்தலில் வெற்றிக்கொடி நாட்டியுள்ள சந்திரசேகர ராவ், ஃபெடரல் ஃப்ரன்ட் என்ற பெயரில் 3வது அணி அமைக்க முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து அதற்குத் தலைமை தாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்காக நாடெங்கும் கடந்த ஒரு ஆண்டாக சுற்றுப்பயணம் செய்து தலைவர்களை சந்தித்த அவர், அதன் உச்சக்கட்டமாக பிரமாண்ட கூட்டத்தை நடத்தவுள்ளார்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள பாஜக அல்லாத கட்சிகளுக்கு இதில் பங்கேற்க அவர் அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் பதவியை நோக்கிய மம்தாவின் மிக முக்கிய நகர்வாக இதை அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இம்மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பதில் அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்க உள்ளார். இது குறித்து அவர் மம்தா பானர்ஜிக்கு ராகுல்காந்தி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கொல்கத்தாவில் நடைபெற உள்ள கூட்டம் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வலுவான செய்தியை தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இக் கூட்டத்திற்கு தன் கட்சி பிரதிநிதியை அனுப்ப உள்ளார். இதன் மூலம் பிரதமர் பதவிக்கான போட்டியில் உள்ள ராகுல்காந்தியும், மாயாவதியும் கூட்டத்தில் நேரடியாக பங்கேற்கவில்லை. மேலும், 3வது அணி முயற்சியில் முனைப்பு காட்டும் டிஆர்எஸ் கட்சியின் சந்திரசேகர் ராவும் இக்கூட்டத்தில் பங்கேற்க மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. அவருக்கு இணக்கமாக உள்ள ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோரும் இதில் கலந்து கொள்ளமாட்டார்கள் எனக் கூறப்படுகிறது. இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக திமுக தலைவர் ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர் பாலு உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கொல்கத்தா சென்றுள்ளனர்.
1977 ஆம் ஆண்டு இதே கொல்கத்தா பிரிகேட் மைதானத்தில் ஜோதிபாசு நடத்திய பிரமாண்ட கூட்டம் அம்மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து 34 ஆண்டு கால கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு உதவியது. இந்நிலையில், அதே இடத்தில் 42 ஆண்டுகளுக்குப் பிறகு மம்தா நடத்த உள்ள மாநாடு, தேசிய அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Loading More post
”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்
என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் - மத்திய அரசு அறிக்கை!
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!