[X] Close

எதற்கும் அஞ்சமாட்டேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

chief-minister-edappadi-palanisamy-warns-to-dmk

எதற்கும் அஞ்சமாட்டேன் எனவும் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும்வரை அதிமுகவில் தான் இருப்பேன் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை காட்டுப்பாக்கம் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது, தமிழகத்தில் உயர்கல்விக்கு வித்திட்டவர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் எனவும், மக்கள் மனதில் இன்னும் எம்.ஜி.ஆர் மறையவில்லை எனவும் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டினார்.


Advertisement

மேலும், ஏற்கனவே பதவியில் இருந்தபோது கிராமங்களுக்கு செல்லாத ஸ்டாலின் தற்போது கூட்டங்களை நடத்தி வருவதாக குற்றம்சாட்டினார். 

இரண்டாக பிரிந்த கம்யூனிஸ்ட் கட்சி கூட ஒன்று சேரவில்லை எனவும், ஆனால் எம்.ஜி.ஆர் மறைவின்போது உடைந்த இயக்கத்தை ஒன்றாக சேர்த்தவர் ஜெயலலிதா எனவும் தெரிவித்தார்.


Advertisement

சட்டமன்றத்தில் ஜெயலலிதாவை அவமதித்த நிகழ்வு திமுக ஆட்சியில் தான் நடைபெற்றது எனவும், பல சோதனைகளை கடந்துதான் ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்றார் எனவும் குறிப்பிட்டார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்கட்சி தலைவராக இருந்தபோது அவருக்கு பல கொடுமைகள் நடந்ததாகவும் தெரிவித்தார்.

கோடநாடு சம்பவம் கூலிப்படையினரால் செய்யப்பட்டது எனவும், கோடநாடு பிரச்னையை சட்டப்படி தவிடு பொடியாக்கி காட்டுவேன் எனவும் கூறினார். பொங்கல் பரிசு கொடுத்ததை பொறுக்கமுடியாமல் திமுக பொய் வழக்கை ஜோடிப்பதாகவும், கோடநாடு எஸ்டேட்டில் ஆதாரம் இருந்தால் சசிகலா குடும்பத்தினர் எங்களை சும்மா விடுவார்களா எனவும் கேள்வி எழுப்பினார்.

மேலும், தான் எதற்கும் அஞ்சமாட்டேன் எனவும், கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை அதிமுகவில் இருப்பேன் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூளுரைத்தார்.


Advertisement

Advertisement
[X] Close