கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற உள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.
அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் அம்மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளில் தலா 38 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இவர்கள் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்குள்ள அமேதி, ராபரேலி தொகுதிகளில் போட்டியில்லை என்று அறிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்பதை மாயாவதி தெளிவுப்படுத்தினார். அதற்கு அகிலேஷ் யாதவ் வழிமொழிந்தார்.
இதையடுத்து உத்தரப் பிரதேசத்தில் போட்டியிடுவது தொடர்பாக காங்கிரஸின் உயர்மட்டக் குழுக் கூட்டம் லக்னோவில் கூடியபோது கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 80 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என அறிவித்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கொல்கத்தாவில் நடைபெற உள்ள கூட்டம் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வலுவான செய்தியை தெரிவிக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் நாளை நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்கிறார். அரவிந்த் கெஜ்ரிவால், குமாரசாமி, சந்திரபாபு நாயுடு ஆகிய முலமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
மேலும் காங்கிரஸை கூட்டணியில் இருந்து விலக்கி வைத்து விட்டு மாயாவதியுடன் கூட்டணி வைத்த அகிலேஷ் யாதவும் இவர்கள் கூட்டனியை ஆதரித்துள்ள தேஜஸ்வி யாதவும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். இது தவிர ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!